பல் துலக்காத காரணத்திற்காக 14 வயது சிறுவனுக்கு நெருப்பால் சுடப்பட்ட சம்பவம்

651 0

14 வயது பாடசாலை மாணவனின் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் நெருப்பால் சுடப்பட்ட சம்பவம் ஒன்று புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காலையில் பல் துலக்காத காரணத்திற்காக தனது மாமாவால் இவ்வாறு அவர் மீது நெருப்பால் சுடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவனின் தாய் தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரின் உறவினரின் வீட்டில் மகனை ஒப்படைத்து சென்றுள்ளார்.

குறித்த நபர் அந்த சிறுவனின் வாயில் எரிந்து கொண்டிருந்த விறகை திணித்துள்ளார்.

இதனால் அந்த சிறுவனின் உதடு மற்றும் முகத்தில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவன் தற்போது புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.