வட பகுதியில் மட்டும் இன்னமும் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் படையினர் குந்தியிருக்கும் நிலையில் தற்போது வெறும் 27 ஆயிரத்து 230 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே வடபகுதியில் படையினர் நிலை கொண்டுள்ளதான தகவலை வேண்டுமென்றே கசிய விட்டு சர்வதேசத்தையும் சமூக ஆர்வலர்களையும் திசைதிருப்ப முயற்சிக்கின்றதா தேசிய நல்லிணக்க செயலணியின் அலுவலகம் .என்ற மிகப் பெரும் கேள்வி எழுப்பப்படுகின்றது.இதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் முப்படையினரின் வசம் தற்சமயம் 27 ஆயிரத்து 230 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகள் உள்ளதாகவே குறித்த தேசிய நல்லிணக்க செயலணியின் அலுவலகத்தின் தரவில் காட்டப்பட்டுள்ளது . அந்த வகையில் குறித்த தரவுகளில் முதலாவதாக யாழ்ப்பாண மாவட்டத்தின் கணக்கு காட்டி ஓர் திசை திருப்பல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா ? என்ற ஐயமும் எழுப்பப்படுகின்றது. இங்கே யாழ்ப்பாணம் தொடர்பில் வெளியிட்டுள்ள தரவுகள் மிகச் சரியாக காண்பிக்கப்பட்டு வடக்கின் ஏனைய 4 மாவட டங கள் தொடர்பான தரவுகளும் இருட்டடிப்பே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது யாழில் இராணுவத்தினர் வசம் 3 ஆயிரத்து 92 ஏக்கர் தனியார் காணிகளும் 548.5 ஏக்கர் அரச காணியும் உள்ளதுடன் கடற்படையினர் வசம் 513 ஏக்கர் தனியார் கானியும் 108 ஏக்கர் அரச காணிகளும் உள்ளது. இதேபோன்று விமானப் படையினர் வசம் 646.5 ஏக்கர் தனியார் காணிகளும் 391.5 ஏக்கர் அரச காணியுமாக மொத்தம் 4 ஆயிரத்து 252 ஏக்கர் தனியார் காணிகளும 1047. 72 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 5 ஆயிரத்து 299.39 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளதாக சரியான அளவுகள் காட்டப்பட்டுள்ளபோதிலும் .கிளிநொச்சி மாவட்டத்தினைப் பொறுத்த மட்டினில் இராணுவத்தினர் வசம் 217.5 ஏக்கர் தனியார் காணியும் , 1372.5 ஏக்கர் அரச காணியும் உள்ளதோடு கடற்படையினர் வசம் 10.38 ஏக்கர் தனியார் காணியும் 380.63 ஏக்கர் அரச காணியும் உள்ளது.
இதேபோன்று விமானப்படையினர் வசம் எந்த நிலங்களுமே இல்லை எனவும் இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தினில் மொத்தமாக 227.91 ஏக்கர் தனியார் காணிகளும் 1756.15 ஏக்கர் அரச காணியுமாக மொத்தம் 1984.06 ஏக்கர் நிலங்கள் மட்டுமே படைவசம் உள்ளதாகவும்
முல்லைத்தீவு மாவட்டத்தினில் இராணுவத்தினர் வசம் 540.29 ஏக்கர் தனியார் காணிகளும் 6 ஆயிரத்து 934.38 ஏக்கர் அரச காணியும் உள்ளதுடன் கடற்படையினர் வசம் 671 ஏக்கர் தனியார் கானியும் 44.80 ஏக்கர் அரச காணிகளும் உள்ளது. இதேபோன்று விமானப் படையினர் வசம் தனியார் காணிகள் எவையும் இல்லை எனவும் 958 ஏக்கர் அரச காணியுமாக மொத்தம் ஆயிரத்து 211.29 ஏக்கர் தனியார் காணிகளும 7 ஆயிரத்து 937.18 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 9 ஆயிரத்து 148.47 ஏக்கர் நிலங்கள் படையினர் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் இராணுவத்தினர் 20.45 ஏக்கர் தனியார் காணிகளும் 1942.27 ஏக்கர் அரச காணியும் உள்ளதுடன் கடற்படையினர் வசம் 101 ஏக்கர் தனியார் கானியும் 1003.70 ஏக்கர் அரச காணிகளும் உள்ளது. இதேபோன்று விமானப் படையினர் வசம் தனியார் காணிகள் இல்லாத போதும் 227 ஏக்கர் அரச காணியுமாக மொத்தமாக 121.45 ஏக்கர் தனியார் காணிகளும 3 ஆயிரத்து 172.97 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 3 ஆயிரத்து 294.42 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு வவுனியா மாவட்டத்தினில் இராணுவத்தினர் வசம் 68.46 ஏக்கர் தனியார் காணிகளும் 5 ஆயிரத்து 864.07 ஏக்கர் அரச காணியும் உள்ளதுடன் கடற்படையினர் வசம் எந்த நிலங்களும் கிடையாது . விமானப் படையினர் வசம் தனியார் காணிகள் கிடையாது 1571.60 ஏக்கர் அரச காணியுமாக மொத்தம் 68.46 ஏக்கர் தனியார் காணிகளும 7 ஆயிரத்து 435.67 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 7 ஆயிரத்து 504.13 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையிலேயே வடக்கில் மொத்தமாக அரச காணிகள் 21 ஆயிரத்து 349. 69 ஏக்கரும் தனியார் காணிகள் 5 ஆயிரத்து 880.78 ஏக்கருமாக மொத்தமாக 27 ஆயிரத்து 230 ஏக்கர் நிலம் படைவசமுள்ளதாக கான்பிக்கப்பட்டுள்ளது. இங்கே வடக்கின் வடக்கின் 5 மாவட்டங்களிலும் 5 வகையான காணிகள் உள்ளன அவை 1, தனியாருக்குச் சொந்தமான காணி 2 , அரச காணிகள் இவை பிரதேச செயலாளரின் ஆளுகையின் கீழ் உள்ளது. 3 வன வளத்திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளும் , 4 வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் , 5 அரச திணைக்களங்களிற்குச் சொந்தமானவை என்பன அடங்கும் . வடக்கில் யாழ்ப்பாணத்தில் 1, 2 , 5 வகையான காணிகள் மட்டும் உள்ளபோதிலும் சிறிதளவு 4 வகை காணிகளும் உண்டு . ஆனால் வடக்கில் யாழ்ப்பாணத்தினை தவிர்ந்த 4 மாவட்டங்களிலும் வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசித் திணைக்களத்தின் ஆளுகையிலேயே அதிக நிலங்கள் கானப்படுகின்றன. இவை தொடர்பில் குறித்த செயலணியால் வாய் திறக்கப்படவே இல்லை.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தினில் முப்படையினர் வசமும் தனியார் காணிகள் ஆயிரத்து 211.29 ஏக்கரும் அரச காணிகள் 7 ஆயிரத்து 937.18 ஏக்கருமாக மொத்தம் 9 ஆயிரத்து 148.47 ஏக்கர் நிலங்கள் மட்டுமே படையினர் வசம் உள்ளதாக வேண்டுமென்றே தவறான தகவலே காட்டப்பட்டுள்ளது. வட மாகாணத்திலேயே அதிக நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மாவட்டமாக விளங்குவதே முல்லைத்தீவு மாவட்டம்தான் .இங்கே படைகளின் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிலங்களின் அளவு மட்டுமே இவை . இதே போன்று வனவளத் திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களின் அளவு பட்டியலிடப்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பகாமம் பகுதியில் 8 ஆயிரத்து 500 ஏக்கர் வனப் பகுதியும் , கரிப்பட்ட முறிப்பு முதல் இரணைமடுக் குளம் வரையிலான 3 ஆயிரத்து 500 ஏக்கர் வனப்பகுதியும் , கேப்பாபுலவில் 2 ஆயிரத்து 200 ஏக்கரும் விமானப்படையினர் வசம் உள்ளதோடு ஏ9 வீதிக்கு அண்மையாக முறிகண்டிப் பகுதியில் 1750 ஏக்கரும் , கொக்குளாயில் 520 ஏக கரும் , கோட்டைகட்டி , அம்பலப்பெருமாள்குளம் , அமைதிபுரங்களில் தலா 50 ஏக்கரும் தேறாங்கண்டலில்ல 120 ஏக்கரும் இராணுவத்தினர் வசமும் என மொத்தம் 16 ஆயிரத்து 720 ஏக்கர் நிலம் வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதிகளில் பாரிய படை நிலைகள் உள்ள தகவல் ஒரு மாவட்டத்தினில் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வவுனியா மாவட்டத்தினில் செட்டிகுளம் பிரதேசத்தினில் வன்னியால் இடம்பெயர்ந்து வந்த மக்களிற்காக இடைத்தங்கள் முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட மெனிக் முகாம் பகுதியில் 6 ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும் , கல்மடு மற்றும் முறிப்பு ஆகிய இரு இடங்களிலும் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களிலும் விட அதிக பிரதேசங்களாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகளாக 10 ஆயிரத்து 200 ஏக்கர் வனவளத் திணைக்களத்தின் நிலங்களில் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மன்னாரில் முள்ளிக்குளம் பகுதியில் 600 ஏக்கர் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நிலத்தில் கடற்படையினரும் சன்னாரில் 3 ஆயிரம் ஏக்கர் வனவளத் திணைக்கள நிலத்தில் இராணுவத்தினரும் குடிகொண்டுள்ள தகவல்களும் மறைக்கப்பட்டே உள்ளன.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தினில் முழங்காவில் பகுதியிலர வனவளத்திணைக களத்தின் 1100 ஏக்கர் கடற்படையினரின் வசமும் , புண்ணை நீராவியில 400 ஏக்கர் சிவில் பாதுகாப்பு படையிர் வசமும் உள்ளதோடு ஜெயபுரம் பகுதியில் 450 ஏக்கர் இராணுவத்தினரின் வசமும் வன்னேரியில் 25 ஏக்கர் இராணுவத்தினர் வசமும் என இங்கும் 1975 ஏக்கர் நிலம் வனவளத் திணைக களத்திற்குச் சொந்தமான நிலத்தில் படையினர் நிலை கொண்டுள்ளனர். இவ்வாறு மறைக்கப்பட்ட அளவுகள் மட்டும் 40 ஆயிரம் ஏக்கரை கடந்து விட்டபோதும் அதில் முல்லைத்தீவில் 16 ஆயிரத்து 720 ஏக்கரும்ங, வவுனியாவில் 10 ஆயிரத்து 200ம் , மன்னாரில் 3 ஆயிரத்து 800 ஏக்கரும் , கிளிநொச்சியில் 1976 ஏக்கருமாக மொத்தம் 32 ஆயிரத்து 695 ஏக்கரின் அளவு இங்கே இனம்காட்டப்பட்டுள்ளது.
இந்த வகையில் அரச அதிபரின் ஆளுகைக் காணிகளும் , தனியார் காணியும் 27 ஆயிரத்து 230 ஏக்கரிலும் வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசித் திணைக்களங்களின் காணியான 32 ஆயிரத்து 695 ஏக்ரிலும் ( எம்மால் இனம் காணப்பட்டவை இந்த அளவானது இதனை விடவும் உள்ளதாகவே கூறப்படுகின்றது) மொத்தம் 59 ஆயிரத்து 925 ஏக்கர் நிலத்தில் படையினர் நிலை கொண்டுள்ளமை இவற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

