
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்றமையானது அரசியல் ரீதியிலான பழிவாங்கல் அல்லவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் பொதுமக்களின் பணம் சூரையாடப்பட்டமையினால் மக்கள் நல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனது.
தற்போதைய அரசாங்கத்தினால் பொது மக்களின் பணம் சூரையாடப்படாததினால் மக்கள் நல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த காலத்தில் ஊழலில் ஈடுப்பட்டவர்கள் கைதுசெய்யப்படுகின்ற போது தாம் பழிவாங்கப்படுவதாக கூறுகின்றனர்.
எனினும் குற்றம் செய்தவர்கள் கைதுசெய்யப்படுவதோ தண்டிக்கப்படுவதோ அரசியல் பழிவாங்கல் ஆகாது என பிரதமர் குறிப்பிட்டார்.

