அமெரிக்காவினால் கொரிய தீபகற்பத்திற்கு யுத்தகப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து, வடகொரியா இன்று பதில் வழங்கியுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதில் அளிக்கும் வகையிலேயே ட்ரம்ப் நிர்வாகம் இந்த இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
எவ்வாறாயினும் அமெரிக்கா இவ்வாறு தன்னிச்சையாக செயற்படுமாயின் அதற்கு பதில் வழங்க தயார் என வடகொரியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பிராந்தியத்தில் யுத்த பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் வடகொரிய அரச பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வகையான அச்சுறுத்தல் நிலையில் யுத்தம் ஒன்றை அமெரிக்கா விரும்புமாயின் அதற்கும் தாம் தயார் எனவும் வடகொரியா குறிப்பிட்டுள்ளது.

