கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 21வது நாளாகவும் தொடர்கிறது.
தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை.
இதுவரை காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து வந்த தாங்கள் இனியும் அவ்வாறு வாழ முடியாது.
எனவே தமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.


