உஷ்ணமான காலநிலை நீடிப்பதால் நோய்கள் பரவக்கூடும்

242 0
நாட்டில் காணப்படும் உஷ்ணமான காலநிலையானது அடுத்த மாதம் வரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த காலநிலையே இதற்கு காரணம் என அவதான நிலையத்தின் பிரதி பணிப்பாளர் அனுசா வர்ணசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கண் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கண் நோய் மாத்திரமின்றி வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான ஏதுநிலை காணப்படுவதாகவும், அவை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, உடல் வறட்சியை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை அடிக்கடி குளிக்கச் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தை தனித்துக்கொள்ள முடியும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.