இலங்கையும் சீனாவும் பண்பாட்டு ரீதியாக சிறந்த நட்பு நாடுகள்

345 0

இலங்கையும் சீனாவும் பண்பாட்டு ரீதியாக சிறந்த நட்பு நாடுகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் யூ சென்ங்செங் இதனை தெரிவித்ததாக, சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

சீனாவின் உயர் அரசியல் பிரதிநிதி கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் 60 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமை குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தநிலையில் சீனா, ஹம்பாந்தோட்டை மற்றும் பல பகுதிகளில் மேற்கொண்டு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.

இதேவேளை சீன பிரதிநிதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட பலரை சந்தித்து கலந்துரையாடலை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.