ஜனாதிபதியை சந்திக்க உள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு

309 0

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் தினங்களில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணி விடுவிப்பு, காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

இவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.