கிளிநொச்சியில் காவற்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல்

348 0

கிளிநொச்சியில் காவற்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் பயணித்த அரச பேருந்து ஒன்றும், அக்கராயன்குளம் நோக்கி பயணித்த உந்துருளியும் புதுமுறிப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

இதே அரச பேருந்து ஸ்கந்தபுரம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த பேருந்தை இனி சேவையில் ஈடுபடுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

இதன்போது இளைஞர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று பின்னர் தணிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.