சென்ட்ரல்-ஹவுரா மெயில் நாளை காலையில்தான் புறப்படும்

231 0

சென்னையில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படவேண்டிய சென்ட்ரல்-ஹவுரா மெயில் நாளை காலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு புறப்படவேண்டிய இரண்டு ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இணை ரெயில்கள் வராததால், அதற்கேற்ப புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை செனட்ரல் – ஹவுரா மெயில் (12840) நாளை காலை 5.00 மணிக்கு புறப்படும். இணை ரெயில் 5 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக வரும்.

இதேபோல் சென்னை சென்ட்டில்-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை காலை 8.45 மணிக்குப் பதிலாக மதியம் 12 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இதேபோல், கொச்சுவேலியில் இருந்து கவுகாத்திக்கு (பெரம்பூர் வழி) மே மாதம் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் (ஞாயிறு) சுவிதா சிறப்பு ரெயில் (82642) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கொச்சுவேலியில் இருந்து 12 மணிக்கு புறப்பட்டு கவுகாத்திக்கு புதன்கிழமை 8.45 மணிக்கு சென்றடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மே மாத சனிக்கிழமைகளில், அதாவது மே 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் அகமதாபாத்துக்கு சுவிதா சிறப்பு ரெயில் (82611) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் அகமதாபாத் சென்றடையும்.