43 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலி பெண் குழந்தை

268 0

நடு வானில் 43 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த துருக்கி விமானத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று நாடுகளில் குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

நடு வானில் 43 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த துருக்கி விமானத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று நாடுகளில் குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

விமானங்களில் பயணிக்கும் கர்ப்பிணிகள் 28 வாரங்களுக்கு உட்பட்ட கர்ப்பக் காலத்தில் டாக்டர்களின் சான்றிதழ் இல்லாமலும், 28 வாரங்களில் இருந்து 35 வாரங்களுக்கு இடையிலான கர்ப்பக் காலத்தில் டாக்டர்களின் சான்றிதழுடனும் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவ்வகையில், கினியா நாட்டின் தலைநகரான கோனாக்ரி-யில் இருந்து பர்கினோ ஃபேஸோ நாட்டின்
தலைநகரான ஓவாகாடோவ்கோ நகரை நோக்கி துருக்கி நாட்டுக்கு சொந்தமான துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் போயிங் 737 விமானம் கடந்த 7-ம் தேதி பிறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் வந்த நஃபி டியாபை என்ற 28 வார கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, சுறுசுறுப்படைந்த அந்த விமானத்தின் பணிப் பெண்கள், பிரசவ வலியால் துடித்த அந்தப் பெண் அமர்ந்திருந்த இடத்தின் அருகே போர்வைகளால் ஆன தற்காலிக தடுப்பு ஒன்றை ஏற்படுத்தினர். அவர்களின் உதவியுடன் அழகான ஒரு பெண் குழந்தையை அந்தப் பயணி ஈன்றெடுத்தார்.

தங்களது விமானத்தில் ஒரு ‘இளவரசி’ பிறந்துள்ள தகவலை துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பிறந்த குழந்தைக்கு கடிஜு என பெயரிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு தனது தாயாரின் நாட்டில் வழக்கமான குடியுரிமை கிடைத்துவிடும். இதுதவிர, சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் வான்எல்லை சட்டங்களின்படி, இந்த குழந்தை பிறந்தபோது எந்த நாட்டின் வான்எல்லையின் மீது அந்த விமானம் பறந்ததோ, அந்த நாட்டின் குடியுரிமைக்கு மனு செய்யவும் வாய்ப்புள்ளது.

இதுதவிர, இதுபோல நடு வானில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை தொடர்பாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் எடுத்துள்ள ஒரு முடிவின்படி, எந்த நாட்டுக்கு சொந்தமான விமானத்தில் பிரசவம் நிகழ்ந்ததோ.., அந்த நாட்டின் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பார்க்கப் போனால், அந்தக் குழந்தைக்கு துருக்கி நாட்டிலும் குடியுரிமை கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிர்ஷ்டசாலி குழந்தை பிறந்த ஆனந்தமயமான தருணத்தை துருக்கி விமானப் பணிப்பெண்கள் கொண்டாடி மகிழும் காட்சியை காண…

https://www.youtube.com/watch?v=3tqZnJrBJt4