எல்பிட்டிய – அவித்தாவ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

38 0

எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில்  முச்சக்கரவண்டி ஒன்றை  கொள்கலன் வாகனம் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் மூவரில் ஒருவர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையிலும் இருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்பிட்டியவிலிருந்து அவித்தாவ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், அவித்தாவவிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற கொள்கலனும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.