வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் விமான நிலையத்தில் கைது

119 0

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (8) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஜா – எல, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 50 வயதுடையவர்களாவர்.

இவர்கள் இருவரும் இன்று (8) திங்கட்கிழமை அதிகாலை 12 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த இரு வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 56 விஸ்கி மதுபான போத்தல்கள் மற்றும் 12 மடிக்கணினிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.