நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்தோட்டை நூல்கந்தூர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இரவு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது,
ஹங்குராங்கெத்த பகுதியில் இருந்து தெல்தோட்டை வரை (காமன்ட்) ஆடைதொழிற்சாலையில் தொழில் புரியும் பெண்களை ஏற்றி செல்லும் தனியார் பஸ் நேற்றைய தினம் இரவு நூல்கந்தூர பகுதியில் பாலத்தில் இருந்து விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
பஸ்ஸில் பயணித்த இரு பெண்களும் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகி தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரு பெண்கள் நேற்று இரவு பேராதெனிய வைத்தியசாலைக்கு இடம் மாற்றம் செய்துள்ளனர்.
பஸ்ஸில் பயணித்த பெண்கள் கூறியதாவது, சாரதி தொடர்ந்து தொலைபேசி மூலமாக பேசிகொண்டு வந்த காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பஸ்ஸில் பயணித்த பெண்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

