பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் இருந்து அதிக கட்டணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள்

263 0

பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் இருந்து அதிக கட்டணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக 1955 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது குறித்த விடயம் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.ஜே.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

இவ்வாறு பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்திற்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் 3 மாதங்களுக்கு தடை செய்யப்படும்.

தூரப்பிரயாணங்களுக்கான பேருந்துகள் போதியளவில் இல்லாமையால் மாகாண அதிகார சபைக்கு சொந்தமான பேருந்துகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இவ்வகையான பேருந்துகளுக்கு மாத்திரமே விசேட கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன கூறுகையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் கட்டணங்கள் தொடர்பில் 011 755 5 555 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.