தனியார் மருத்துவ கல்லூரிக்கான குறைந்த பட்ச தரநிலைமை அடுத்த 2 வாரத்தில்

233 0

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பிலான குறைந்த பட்ச தரநிலைமை தொடர்பில் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கவுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

குறைந்த பட்ச தர நிலைமை குறித்து ஆலோசனை செய்வதற்காக கடந்த வாரம் திடீர் கூட்டமொன்றை கூட்டி ஆலோசனை செய்தாக சபையின் பதிவாளர் டாக்டர் டெரன்ஸ் காமினி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நிறைவடைந்துள்ள சகல தீர்மானங்களும் அரச பல்கலைக்கழகங்களின் வைத்திய பீடங்களின் சபைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.