தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம் தலைமையில் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் – யஹியாகான்

22 0

பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டம் என்பது சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் தலைமையில் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 3 ஆசனங்களைப் பெற்ற ஜே.வி.பி. கூட  இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால்  பாராளுமன்றம் நுழைய முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு கூட இது ஆபத்தானது. மலையக கட்சிகள் மற்றும் சிறிய தமிழ் கட்சிகளும் கூட பாராளுமன்ற ஆசனத்தை இழக்கும் அபாயமுள்ளது.

இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் – மிக ஆழமான கருத்தாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.  தனிப்பட்ட ரீதியில் சில சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

எனவே – ரவூப் ஹக்கீம் தலைமையில் சகல சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் ஒன்றுபட்டு – ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் பேச்சு நடாத்தி இந்த தேர்தல் திருத்த சட்டத்தை அடியோடு இல்லாமலாக்க வேண்டும்.

நாட்டில் எத்தனையோ வகையான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் இதனை முதன்மைப்படுத்துவது அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்க மாட்டாது. என்றும் யஹியாகான் மேலும் தெரிவித்தார்.