பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடனால் பயனாளிகள் உயர்வடைவதிலேயே வெற்றி தங்கியுள்ளது – யாழ் அரச அதிபர்

399 0
 பயனாளிகளிக்கு கடன் வழங்குவது என்பது முக்கியமில்லை என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன், வழங்கப்பட்ட கடன் மூலம் பயனாளிகளின் வாழ்வாதாரம் உயர்வடைவதில் தான் வெற்றி தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்
சமூகவலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கிழ் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சமுர்த்தி அபிமானி- 2017” மாவட்ட மட்ட வர்த்தகக் கண்காட்சி  யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமானது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. முயற்சியாளர்களுக்கு பல கடன்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது ஆனால்
கடனை வழங்குவது முக்கியமில்லை, வழங்கப்பட்ட கடனை வைத்து பயனாளிகள் எவ்வாறு தமது வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளார்கள் என்பதில் தான் வெற்றி தங்கியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் உள்ள முயற்சியாளர்கள் சிறந்த முறையில் தமது உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசின் புதிய திட்டமான 2 ஆயிரம் ஏற்றுமதியாளர்களை திட்டத்தில் இந்த வருடம் யாழ் மாவட்டத்தில் இருந்து 20 ஏற்றுமதியாளர்களை உருவாக்க வேண்டும்.
எனவே வெளிநாட்டுக்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையில் திறம்பட உற்பத்திகளை மேற்கொள்ளும் பயனாளிகள் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். சிறு முயற்சியாளர்கள் தொடர்சியான முறையில் தமது வாழ்கையில்  சிறந்த வெற்றியை பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அந்த வகையில் வாழ்வாதாரம் மென்மேலும் உயர்சியடைய உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்