ஆட்சி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம்

29 0

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது உயிர்த்தஞாயிறு தினத்திற்கான செய்தியில் இதனை தெரிவித்துள்ளது.

நாடு கடும் அரசியல் பொருளாதார சமூக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் உயிர்த்தஞாயிறு கொண்டாடப்படுகின்றது என மக்களின் துயரங்களை குறைப்பதற்கு நாட்டின் ஆட்சி முறையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபடவேண்டியது அனைத்து பிரஜைகளினதும் கடமை எனவும் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

நாடு முன்னர் ஒருபோதும் இல்லாதஅளவிற்கு நெருக்கயை எதிர்கொண்டுள்ள சூழலில் நாங்கள் உயிர்த்தஞாயிறு தினத்தை கொண்டாடுகின்றோம் என தெரிவித்;துள்ள  கத்தோலிக்க ஆயர்பேரவை உயிர்த்த ஞாயிறு என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் புனிதமான மர்மம் மற்றும் உச்சக்கட்டம் இந்த நேரத்தில் நாங்கள்   எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிப்பதற்கு இறைவனை வேண்டுவோம் எனவும் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று படுகொலைகள் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றது இதன்போது 275 பேர் கொல்லப்பட்டனர் பலர் நிரந்தர நோயாளிகளாக மாறினர் துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களின் வலிகளிற்கு தீர்வை காண்பதற்காக நீதியை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.