இலங்கை இந்திய கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கை

297 0

இலங்கை இந்திய கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து ஆராய கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்ததையின்போதே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலார்களின் 150 படகுகளை விடுவிக்குமாறு இந்திய கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஆராயவேண்டும் என இலங்கை தரப்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.