வெகுவிரைவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்- வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

229 0

மத்திய மாகாண அரசாங்கங்கள் தம்மிடையே குற்றங்களை கூறிக்கொண்டிருக்காமல் வெகுவிரைவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 48 வது நாளாகவும் இன்று இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மத்திய மாகாண அரசாங்கங்கள் தமக்கான நியமனங்களை வழங்குவதற்கு உறுதியான நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பிரதமரின் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று வருகைதந்து, 2 மாத கால அவகாசம் கோரிய போதிலும், இதுவரையில் உறுதியான பதில்கள் எழுத்து மூலம் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்பாக தமது பிரச்சினைகளை மத்திய மாகாண அரசுகள் தீர்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.