சட்டவிரோத சொத்துக்களை வைத்திருந்தவருடன் தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் குறித்து விசாரணை!

114 0

சட்டவிரோத சொத்துக்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவருடன் தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பான தகவல்களை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

இந்த பொலிஸ் சார்ஜன்ட் சந்தேக நபருடன் சேர்ந்து சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தாரா என்பது குறித்து பொலிஸ்  தலைமையகம் விசாரணை நடத்தி வருகிறது.

பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இந்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.