ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

97 0

தலங்கம பகுதியில்  ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விக்ரமசிங்கபுர பிரதேசத்தின் தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து 10 கிராம் 700 மில்லி கிராம்  ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்குலான பிரதேசத்தைச்  சேர்ந்த 36 வயதுடையவராவார்.

இது தொடர்பில்  தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.