வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை  ஆரம்பித்துள்ளார்(காணொளி)

285 0

வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இலங்கையில் வயோதிபர் இல்லங்களை இல்லாதொழிக்க 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரவுள்ளார்.

இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்தார்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டு ஆலய வளாகத்தில் ஒன்று கூடிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக  செ.மயுரன், ஜீ.ரி.லிங்கநாதன், தியாகராஜா,  புளொட் முக்கியஸ்தரும் வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம், தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், சமுக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம், அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வளர்கள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனா.

இதன்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கொடியை அசைத்து பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.