புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை

444 0

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் நாவற்குடா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தை இன்றும், நாளையும் இயங்கவுள்ளது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலுமுள்ள சமுர்த்தி பயனுகரிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் இந்த சந்தையில் விற்பனைக்கும் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.