பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சிஐடி மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் சில அதிகாரிகள் ஹரக்கட்டாவிடமிருந்து பணம் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை இடமாற்றம் செய்திருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தப்பிச் செல்ல ஹரக் கட்டாவுக்கு உதவியதாக பல பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

