மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகேகொடை ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் வைத்து போதைப் பொருளுடன் முதலாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் 140 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹைலெவல் வீதி 07ஆம் மைல் வீதியில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் 730 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் போதைப் பொருள் விற்பனையின் மூலம் பெற்ற 22,600 பணமும் கைப்பற்றப்பட்டது.
அத்தோடு , ஜம்புகஸ்முல்ல சந்தியில் 25 கிராம் 360 மி. கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்னுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் தெஹிவளை மற்றும் நுகேகொடை பிரதேசங்களைச் சேர்ந்த 24, 26 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

