தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கிப் பயணித்த வேன் அதே திசையில் பயணித்த கொள்கலன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது .
உயிரிழந்தவர் காலி -நாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், வேன் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுஞ்சாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

