எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊவா கரந்தகொல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஆண் ஒருவரை தீவைத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் கடந்த 7 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்த சந்தேக நபர் கரந்தகொல்ல, எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவராவார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

