விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

