ஊதா நிற இலை வடிவ முகம் கொண்ட குரங்குகள் மரணிக்கும் அபாயம்

112 0

ஊதா நிற இலை வடிவ முகம் கொண்ட குரங்குகள் என்றும் அழைக்கப்படும் மேற்கத்திய நாடுகளில் காணப்படும் ஊதா முகம் கொண்ட லாங்கர் இன குரங்குகள் நகர்ப்புறங்களில் காடழிப்பு காரணமாக, உணவு மற்றும் ஓய்வெடுக்கும் இடங்களைத் தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளன.

இதன் காரணமாக இந்த குரங்குகளுக்கு நாய்கள், மனிதர்கள் மற்றும் வாகனங்களினால் ஆபத்தை எதிர்நோக்கம் அபாயத்தில் உள்ளதாக ஸ்மித்சோனியன் நிறுவனத்தின்  விலங்கு நடத்தை ஆய்வாளரும், சூழலியல் நிபுணருமான  பேராசிரியர் வொல்ப்காங் டிட்டஸ்  தெரிவித்துள்ளார்.

அண்மையில் தலங்கம ஏரிக்கு அருகில் ஊதா நிற முகமுடைய மூன்று லாங்கர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு  காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது.

இது தொடர்பில், வொல்ப்காங் டிட்டஸ்  ஆங்கில ஊடமொன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,

ஊதா நிற இலை வடிவ முகம் கொண்ட குரங்குகள் மரங்களில் வாழும் உயிரினம்.

மரங்கள் அழிக்கப்படுவதனால் அவற்றின் வாழ்விடங்கள் இழக்கப்படுவதால் மட்டுமே தரையை நோக்கி படையெடுக்கின்றன.

இந்த சூழ்நிலையில் அதான் தற்போது  நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் தாவரங்களில் அழிவை ஏற்படுத்தும் பூச்சுகளை போல ஊதா நிற இலை வடிவ முகம் கொண்ட குரங்குகளை எண்ணுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் காணப்படும் ஊதா முகம் கொண்ட லாங்கூர் இன குரங்குகள் என்பது தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்பு ஆணையகத்தின் (FFPO) பிரிவு 30ன் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு இனமாகும்.

இது அருகி வரும் ஒரு இனமாகும் என  இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தினால் (IUCN) மதிப்பிடப்பட்டுள்ளது என  தெரிவித்துள்ளார்.