தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று விடுத்துள்ள ஊடக அறிக்யொன்றிலேயே அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள்இ தமக்கு பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவுகளில் ஏதாவது ஒன்றை பெற்று தரும்படி கோருகிறார்கள்.
சட்டமா அதிபர் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவது சாத்தியமாகியது.
இந்த நிலையில், நீண்டகால தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவுகளின் அடிப்படைகளில் விடுவிக்க ஆவண செய்ய ஜனாதிபதியிடம் கோருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்தவார அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

