வவுனியா மாவட்டத்தில் வெறும் 7 ஆயிரத்து 504 ஏக்கர் நிலமே படையினர் வசம் உள்ளதாக தேசிய நல்லிணக்க செயலணியால் தெரிவிக்கப்பட்டதானது வேண்டுமென்றே திசை திருப்பல் தரவாகவே எண்ணத்தோன்றுவதாக வட மாகாண சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டத்தினில் இராணுவத்தினர் வசம் 68.46 ஏக்கர் தனியார் காணிகளும் 5 ஆயிரத்து 864.07 ஏக்கர் அரச காணியும் உள்ளதுடன் கடற்படையினர் வசம் எந்த நிலங்களும் கிடையாது . விமானப் படையினர் வசம் தனியார் காணிகள் கிடையாது 1571.60 ஏக்கர் அரச காணியுமாக மொத்தம் 68.46 ஏக்கர் தனியார் காணிகளும 7 ஆயிரத்து 435.67 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 7 ஆயிரத்து 504.13 ஏக்கர் நிலம் மட்டுமே படையினர் வசம் உள்ளதாக தேசிய நல்லிணக்க செயலணியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் வவுனியா மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அளவுகளே இந்த அளவு நிலம் என்பதே உண்மையாகும். அத்துடன் குறித்த தனியார் மற்றும் அரச காணிகளை விட வன வளத் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்ற பெயரில் 3 முக்கிய படை நிலைகள் உள்ளன. அவை இங்கே கணக்கிடப்படவே இல்லை. அவ்வாறு கணக்கிடப்படாத அளவு நிலம் என்பது செயலணியால் கூறப்பட்ட அளவினை விடவும் அதிகமானதாகும்.
அதன் பிரகாரம் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் மக்களின் இடைத்தங்கல் முகாம் என்னும் பெயரில் அபகரிக்கப்பட்ட 6 ஆயிரத்து 200 ஏக்கர் நிலத்தினையும் இன்று படையினரே ஆளுகின்றனர். இதே போன்று இரணை இலுப்பைக்குளம் வனப் பகுதியில்ங2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பில் இராணுவ பயிற்சி முகாமும் மடுக்கரைப் பகுதியில் 3 ஆயிரத்து 100 ஏக்கர் பிரதேசத்தில் பிரமாண்ட விமானப்படை முகாமிற்காக என அபகரித்துள்ள நிலங்களாக 11 ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எமக்கு மாவட்டத்தின் பால் எழுகின்றது.
வவுனியா மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் வன வளத் திணைக்களத்தின் 11 ஆயிரத்து 300 ஏக்கருடன் தனியார் மற்றும் அரச காணிகளான 7 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் உட்பட மொத்தமாக படையினர் வசம் 18 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது. என்பதே உண்மையாகும்.
அதனை விடுத்து சர்வதேசத்திற்காக போலியாகத் தயாரித்து வெளியிடப்படும் இவ்வாறான தவறான தரவுகளை கசிய விட்டு திசை திருப்பு முயலவோ அல்லது வடக்கில் படையினரின் பிரசன்னம் குறைக்கப்பட்டுள்ளதாக காட்டவோ முயலக்கூடாது. உண்மையான தகவல்களைம் உண்மையான புள்ளி விபரங களையும் தெரிவிப்பதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.
வடக்கு மாகாணத்தில் மட்டும் படையினர் இன்றும் 70 ஆயிரம் ஏக்கரில் குந்தியிருக்க நிரந்தர வாழ் மக்கள் கால் ஏக்கர் அரை ஏக்கர் நிலத்திற்கு மாவட்டச் செயலகத்திற்கும் பிரதேச செயலகத்திற்கும் ஆண்டுக் கணக்கில் அலையும்போது வடக்கில் படையினரிடம் 27 ஆயிரத்து 230 ஏக்கர்தான் உள்ளது. என்பது அப்பட்டமான பொய். எனவே இவ்வாறு பொய்யான தகவல்களே தற்போது நல்லாட்சி என கூறப்படும் காலத்திலும் வெளியிடப்படுமானால் உண்மை திலவரங்களை ஆதாரத்துடன் மீண்டும் சர்வதேசத்தின் முன்னாள் வைக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. ஏனெனில் எமது மக்களின் நி

