வடக்கு வனஜீவராசிகள் திணைக்கள 2017 வேலைத்திட்டத்துக்கு 600 மில்லியன் ஒதுக்கீடு சாள்ஸ் எம் பி

383 0
வட மாகாண வனஜீவராசிகள்  திணைக்களத்தின் கீழான  அபிவிருத்திப் பணிகளிற்கு இந்த ஆண்டில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
வன ஜீவராசிகள் திணைக்களம் தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்றக் கட்டிடத்.தொகுதியில் குறித்த அமைச்சின் செயலாளர் தொடர்பில் ஓர் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் குறித்த அமைச்சின் கீழ் உள்ள அணைத்து மாகாணம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதில் வட மாகாண வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழினா அபிவிருத்திப் பணிகளிற்கு இந்த ஆண்டில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் உறுதி அளித்தார்.
குறித்த நிதியில் வடக்கின் எந்த எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் எவை என்ற விபரங்கள் இம் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும். எனவும் செயலாளரினால் உறுதியளிக்கப்பட்டது. என்றார்.