2017 புலமைப்பரிசில் தினத்தை மாற்றுமாறு கோரி வடக்கு கல்வி அமைச்சு கடிதம்

374 0
இந்த ஆண்டின் தரம் 5 புலமைப்பரீட்சையானது வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டமையினால் பரீட்சை திகதியினை மாற்றுவது தொடர்பில் ஆராயுமாறு திணைக்களத்திடம் கோரியுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கல்வி வட மாகாண அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,
2017ம்  ஆண்டின் தரம் 5 புலமைப்பரீட்சையானது வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று வருவதாக பலராலும்  சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து  பரீட்சை திகதியினை மாற்றுவது தொடர்பில் ஆராயுமாறு நாம் பரீட்சை திணைக்களத்திடம் கோரியுள்ளோம். ஏனெனில் நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவ திருவிழாவிற்காக மாவட்டத்தில் இருந்து மட்டுமன்றி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழமை அதனைவிட குடா நாட்டின் நல்லூரை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்களும் கானப்படும் போன்ற பல விடயங்களை சுட்டிக் காட்டியுள்ளோம்.எனவே இது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த வாரம் பதிலளிப்பதாக தற்போது தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனாலர சாதகமான பதில் வரக்கூடும் என எதிர் பார்க்கின்றோம். என்றார்.