களுத்துறை சிறைத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவர் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பலபிடிய நீதிமன்றத்திற் அருகில் வைத்து குறித்த சந்தேகநபர் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது , மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் தாக்குதல்தாரிகள் வருகை தந்த வேன் வாகனத்திற்கு வழி காட்டியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் , இவர் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மத்துஸ் என்ற பாதாளஉலக உறுப்பினரின் உதவியாளர் என தெரியவந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி களுத்துறை – எதனமடல பிரதேசத்தில் சிறைச்சாலை பேரூந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாளஉலக தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

