பிடிகல, அம்பலாங்கொட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் சிஐடியிடம்!

22 0

எல்பிட்டிய மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் அந்தப் பிரதேசங்களின் பாதுகாப்பு தொடர்பான நிலைமைகளைக் கண்டறிவதற்காக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (13)  அந்தப் பகுதிகளுக்குச் சென்றார்.

பொலிஸ் மா அதிபருடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவும் சென்றிருந்தார்.

பிடிகல, எல்பிட்டிய மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில், பொலிஸ் மா அதிபர் அப்பகுதிகளின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, பிடிகல மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவும் நேற்று அந்தப் பகுதிகளுக்குச் சென்றது.