மொல்லிகுளம் பகுதியிலிருந்து கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

220 0

அம்பாறை – அட்டாளைச்சேனை – மொல்லிகுளம் வனப் பகுதியிலிருந்து விசேட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டுக்கள் கிறிஸ்துக்கு முன் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்வெட்டுக்களை கண்டுபிடிக்கும் திட்டத்தின் கீழ், தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பல கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

பதியதலாவை, தம்மன, இறகாமம், உஹன, லாஹ{கல, மஹஓய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து 61 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மொரணவில கெப்பெட்டிபொல நிலமே வாழ்ந்த வீட்டை புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.