தமிழ் கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்தார் ஜனாதிபதி

200 0

பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும் இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புறக்கணித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்த எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

அந்தப் பணிகள் தாமதமடைவதே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடக் காரணமாகியுள்ளன.

இந்த நிலையில், புதிய தேர்தல் முறைமையை உருவாக்கி, அதன் ஊடாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
புதிய தேர்தல் முறைமையின் ஊடாக தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.