மகளிர் தினத்தன்று பிறந்தநாள்: போதைப்பொருள் விருந்தில் கலந்து கொண்டவர்களில் அறுவருக்கு விளக்கமறியல்!

106 0

ஹோமாகம மாகம்மன ஆடம்பர வீடமைப்புத்  தொகுதியில் மகளிர் தினத்தன்று இடம்பெற்ற  பிறந்தநாளை முன்னிட்டு போதைப்பொருள் விருந்து நடத்திய 27 இளைஞர்களில் போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து இளைஞர்கள் மற்றும் பணத்தை பெற்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று யுவதிகள் கெஸ்பாவ  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 6 பேரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான்  இஷாரா ஜெயக்கொடி உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குவார்.

சந்தேக நபர்களான பெண்களின் சமூக நோய் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.