அளுத்கம பகுதியில் சொகுசு வீடொன்றில் அழகுக்கலை நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட நிலையத்தில் ஓர் ஆணையும் 8 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொஸ்கொட, பலப்பிட்டிய, அளுத்கம, களுத்துறை, பேருவளை, பெந்தர, அஹுங்கல்ல ஆகிய பிரதேசங்களில் இருந்து வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொகுசு மாடி வீட்டின் கீழ் தளத்தில் அழகு கலை நிலையம் நடத்துவது போன்ற போர்வையில் இந்தச் சூதாட்ட நிலையம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அளுத்கம பொலிஸாரினால் ஒருவரை உதவியாளராக பயன்படுத்தி சூட்சுமமாக முறையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்துடம் சூதாட்டத்தில் போது பெறப்பட்ட பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கைதானவர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் .

