களுத்துறை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (17) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது .
களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுககங்கை வாய்க்காலை அண்மித்த கடற்கரையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 35 வயதுடையவர் எனவும் சடலம் இரண்டு நாட்களாக நீரில் மூழ்கியிருக்கலாம் என தெற்கு களுத்துறை பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

