இலங்கையில் கடந்த வருடம் 1,550 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

100 0

சுகாதார அமைச்சின் தேசிய தொழுநோய் அறிக்கையின்படி  , 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் படி ,2023 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 259  தொழுநோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழு நோயாளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 116 தொழு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் .

2019 ஆம் ஆண்டு  1,660 தொழுநோயாளிகளும், 2020 ஆம் ஆண்டு  1,213 நோயாளிகளும், 2021 ஆம் ஆண்டு 1,026 தொழுநோயாளிகளும், 2022 ஆண்டு  1,401 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.