இங்கிரிய, அலபட வீதியிலுள்ள விடுதியொன்றை தாக்கி உடைமைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜா- எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரதேச புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பயிற்சி கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இங்கிரிய ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த மற்றுமொரு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

