பூமியை ஒத்த புதிய கிரகம் கண்டுபிடிப்பு

220 0

பூமியை போன்றே புறச்சூழல் கொண்ட கிரகம் ஒன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

GJ1123b என்ற இந்த கிரகம், பூமியில் இருந்து 39 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

இதனைச் சுற்றிக் கண்ணாடி போன்ற புறச்சூழல் அமையப்பெற்றுள்ளது.

இந்த புறச்சூழலானது நீரினாலோ, மெத்தனேலினாலோ அல்லது இரண்டும் கலந்தோ உருவாகி இருக்கலாம்.

இது பூமியைக்காட்டிலும் 1.4 மடங்கு பெரிய இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு 370 பாகை செல்சியஸில் புறத்தட்டு வெப்பநிலை நிலவுகிறது.