கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 5ம் திகதி இரவு தனது கணவருடன் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற ஒருவரை, அப் பெண்ணின் கணவர் மற்றும் பூங்கா காவலர்கள் உள்ளிட்ட குழுவினர் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் கறுவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

