ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸ்ஸமிலின் மகனால் பெண் ஒருவர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது தான் சரணடையவுள்ளதாக தனது மகன் பொலிஸாரிடம் தெரிவித்ததாக முஸம்மில் தெரிவித்துள்ள நிலையில் சந்தேக நபரோ அல்லது ஆளுநரோ அவ்வாறான சரணடைதல் தொடர்பில் தம்மிடம் நேரடியாகத் தெரிவிக்கவில்லை என பொலிஸார் இன்று (05) தெளிவுபடுத்தியுள்ளனர்.
தமக்கு அவ்வாறான எவ்விதத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரை தாக்கியதாக ஊவா மாகாண ஆளுநரின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்டீன் மீது குற்றஞ்சாட்டி வெள்ளவத்தை பொலிஸில் சில நாட்களுக்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

