பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவன், அவரது மகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, 150 கோடி ரூபாவுக்கு மேல் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சொகுசு விமானம், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் மூன்று தனி வழக்குகளை தாக்கல் செய்தார்.
சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தை இலங்கையில் முதலீடு செய்து பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தனித்தனியான வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு பொதுவான நோக்கத்துடன் செயற்பட்டு பணத்தைச் சுத்தப்படுத்த சதி செய்ததாக, இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

