கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் (காணொளி)

249 0

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்ட 4 உழவு இயந்திரங்களுடன் கூடிய நீர்த்தாங்கிகள், கிளிநொச்சி மாவட்ட செயலகத்திடம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலகர்களிடம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உழவு இயந்திரங்களைக் கையளித்தார்.