கொழும்பை தெற்காசியாவின் கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்!

324 0

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பை தெற்காசியாவின் கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அத்துடன் கொழும்பை கலாச்சார மையமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் பெருமெண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு வாராந்தக் கூட்டத்தொடரில் அமைச்சர் கயந்த கருணாதிலக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டு 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தனர். அவர்களில் 70 வீதமானோர் பொழுதுபோக்குக்காவும், 25 வீதமானோர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் வருகை தந்தனர்.

இருப்பினும், இவர்களுள் ஒரு வீதமானோர் சிறிலங்காவின் பாரம்பரிய கலாச்சார அம்சங்களால் ஈர்க்கப்பட்டு வருகை தந்தனர்.

சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.